இந்திப் படத்தில் நடிக்கவில்லை: சூர்யா மறுப்பு

Bookmark and Share

இந்திப் படத்தில் நடிக்கவில்லை: சூர்யா மறுப்பு

சூர்யா தற்போது மும்பையில் இருக்கிறார். மாஸ் படத்திற்கு பிறகு 'யாவரும் நலம்' விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் முதல்கட்ட பணிகளுக்காக சென்றுள்ளார். இந்தப் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் சூர்யா, இந்தி படத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாவும், நந்திதா சின்ஹா என்பவர் தயாரிப்பதாகவும், அதனால்தான் அவர் மும்பை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை சூர்யா மறுத்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "சூர்யா இந்திப் படம் எதிலும் நடிக்கவில்லை. அந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

நந்திதா சின்ஹா என்கிற தயாரிப்பாளர் யார் என்றே தெரியாது அவரை பார்த்ததுகூட இல்லை. தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions