கட்அவுட்,சுவரொட்டிகள் வேண்டாம் - சூர்யா அறிவிப்பு!

Bookmark and Share

கட்அவுட்,சுவரொட்டிகள் வேண்டாம் - சூர்யா அறிவிப்பு!

பாண்டிராஜ் இயக்கி சூர்யா நடித்து தயாரித்துள்ள பசங்க 2 படம் வருகிற 24ந் தேதி வெளிவருகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூர்யா நடித்த படங்கள் வெளிவரும்போது அரவது ரசிகர்கள் தியேட்டர்களில் சூர்யாவுக்கு கட்அவுட் வைப்பார்கள், வண்ண வண்ண வாழ்த்து சுவரொட்டி அச்சடித்து ஒட்டுவார்கள். 

ஆனால் இது எதுவும் வேண்டாம் என்று சூர்யா, ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் “எனது அன்பு தம்பிகள் சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதை கண்டு மனமகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

உங்களின் மனிதநேய பணி சிறக்க வாழ்த்துகிறேன். அன்பின் வெளிப்படாக எனக்கு நீங்கள் கட்அவுட் வைப்பதையும், சுவரொட்டி ஒட்டுவதையும் நான் என்றைக்கும் விரும்பியதில்லை. உங்களை நேரில் சந்திக்கும்போது இதனை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

வருகிற 24ந் தேதி வெளியாக உள்ள பசங்க 2 படத்திற்கு கண்டிப்பாக இது எதையும் நீங்கள் செய்யக்கூடாது. தியேட்டர்களில் கட்அவுட் வைப்பது, தியேட்டரை அலங்கரிப்பது, வாழ்த்து சுவரொட்டி ஒட்டுவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அந்த உழைப்பையும், பணத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிகளுக்கு செலவிடுங்கள்” இவ்வாறு சூர்யா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions