சூர்யாவின் கண்கள் பிரபாஸிற்கும் பிடிக்குமாம்

Bookmark and Share

சூர்யாவின் கண்கள் பிரபாஸிற்கும் பிடிக்குமாம்

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்துள்ள நடிகர் சூர்யாவின் கண்கள், அவரது காதல் மனைவி ஜோதிகா மற்றும் அவரது பெண் ரசிகைகளைத் தாண்டி டோலிவுட்டின் முன்னணி நடிகர் பிரபாஸையும் கவர்ந்திழுதுள்ளது டோலிவுட்டின் எழுச்சி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பாகுபலி படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்த பிரபாஸ், அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்குள் வேறு ஒரு படத்தில்  நடிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படத்தின் தெலுங்கு மொழிமாற்றமான ராக்ஷ்சடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாஸ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் பேசுகையில், கோலிவுட்டின் முன்னணி நடிகர் சூர்யாவின் கண்கள் தனக்கு  பிடிக்கும் என்று கூறினார். மேலும் சூர்யா நடித்த படங்களிலேயே காக்க காக்க   படம் தன்னைக் கவர்ந்த படம் என்று கூறிய பிரபாஸ் வெவ்வேறு கதைக் களங்களை தேர்வு செய்யும் இயக்குநர் வெங்கட் பிரபுவின், சென்னை 600028 போன்ற படங்களும் தனக்கு பிடிக்கும் என தெரிவித்தார். மேலும் மாஸ் படம் டோலிவுட்டிலும் வெற்றி பெற பிரபாஸ், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions