ரசிகர்களை அரவணைக்கும் சூர்யா!

Bookmark and Share

ரசிகர்களை அரவணைக்கும் சூர்யா!

வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானவர் சூர்யா. அந்த படத்தில் விஜய்யும் நடித்திருந்தார். ஆனால் அதையடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் தனி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சூர்யா, பெரியண்ணா படத்தில் விஜயகாந்துடனும், ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடனும் மீண்டும் இணைந்து நடித்தார்.

அதன்பிறகு, பாலாவின் நந்தாவுக்கு பிறகு அவருக்கென ஒரு இமேஜ் உருவானது. அதோடு கவுதம்மேனன் இயக்கிய காக்க காக்க படம் சூர்யாவுக்கு பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

ஆக, தனது 18 ஆண்டுகால சினிமா பயணத்தில் தற்போது அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை கைப்பற்றியுள்ள சூர்யாவுக்கு ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் நிறைய உள்ளனர். அதனால், சூர்யா அவுட்டோர்களுக்கு படப்பிடிப்புக்காக செல்லும்போது இளைஞர்களும், இளைஞிகளும் அவரை காண படையெடுக்கிறார்களாம்.

அப்படி வரும் ரசிக ரசிகைகளை, யூனிட்காரர்கள் விரட்டியடித்தால் அதை தடுக்கிறாராம் சூர்யா. அவர்களை தான் நடிப்பதை ஒரு ஓரமாக நின்று ரசிக்க வைப்பவர், பின்னர் தனக்கான ஷாட் முடிந்ததும் அவர்களுடன் உரையாடுகிறாராம்.

அப்போது தனது நடிப்பில் உள்ள நிறைகுறைகளை ரசிகர்களிடம் கேட்டறியும் சூர்யா, அவர்களுடன் நின்று போட்டோக்களையும் எடுத்துக்கொள்கிறாராம். இதனால் அவரை பார்க்கவே முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்துடன் வந்த ரசிகர்கள் அவர் தங்களிடம் சந்தோசமாக பேசியதோடு, போட்டோவும் எடுத்துக்கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்களாம்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions