பெயர், புகழ் எல்லாம் நீர்க்குமிழி போன்றதே : சூர்யா

Bookmark and Share

பெயர், புகழ் எல்லாம் நீர்க்குமிழி போன்றதே : சூர்யா

1997ல் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானவர் சூர்யா. அந்த படத்தில் விஜய்யும் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார். அதையடுத்து காதலே நிம்மதி படத்தில் ஷோலோ ஹீரோவாகி விட்டார். இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் தானும் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சூர்யா.

அதோடு, நடிப்போடு தனது எல்லையை நிறுத்திக்கொள்ளாமல், 36 வயதினிலே, ஹைக்கூ படங்களை அடுத்து இப்போது 24 என்ற படத்தையும் தயாரித்து வரும் சூர்யா, அஞ்சான் படத்தில் ஏக் தோ தீன் சார் பாடல் மூலம் பின்னணி பாடகராகவும் உருவெடுத்தார்.

இப்படி பன்முகக்கலைஞனாக வளர்ந்துவிட்டபோதும், தன்னடக்கத்துடன் பேட்டி கொடுத்து வருகிறார் சூர்யா. அந்த வகையில், தனது வளர்ச்சி பற்றி அவர் கூறும்போது, நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம்.

ஏதோ ஒரு சக்தி துணை நிற்கிறது என்று கூறும் சூர்யா, நான் இன்னும் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அடக்கத்துடன் இருப்பேன். காரணம், இந்த பெயர் புகழ் எல்லாமே நீர்க்குமிழி போன்றதுதான் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறுகிறார்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions