8ம் தேதி முதல் 24க்கு தாவும் சூர்யா...

Bookmark and Share

8ம் தேதி முதல் 24க்கு தாவும் சூர்யா...

செய்தித் தலைப்பைப் பார்த்ததும் சூர்யாவிற்கு 8ம் தேதியிலிருந்து 24 வயது ஆகப் போகிறது என்று நாம் சொன்னால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். சும்மா ஒரு ரைமிங்கிற்காக அந்தத் தலைப்பு.

'அஞ்சான்' படத்திற்கு பிறகு தனது படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாகவே இருக்க சூர்யா விரும்புகிறார். இருந்தாலும் அவர் எப்படி 'மாஸ்' படத்தில் ஜாலி கேரக்டரான வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

கௌதம் மேனனையே நம்பாதவர் வெங்கட் பிரபு மீது ஓவராகவே நம்பிக்கை வைத்திருக்கிறாரே என்று கோலிவுட்டிலேயே பேசிக் கொள்கிறார்கள். 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மணி நேரங்களிலோ, சில நாட்களிலோ முடியப் போகிறது.

உடனே எந்த ஓய்வும் எடுக்காமல் சூர்யா, 8ம் தேதி முதல் விக்ரம் குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடிக்கப் போகிறார். இதற்காக மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுவிட்டதாம்.

அங்கு ஒரு மாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள். இடையில் 'மாஸ்' படத்தின் பிரமோஷனுக்காக சில நாட்கள் மட்டும் வருவாராம். '24' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்க உள்ளார். 'யாவரும் நலம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்ரம் குமார் 6 ஆண்டுகள் கழித்து ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளார்.


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions