சூர்யா படத்தின் தலைப்பு மாறுமா?

Bookmark and Share

சூர்யா படத்தின் தலைப்பு மாறுமா?

சும்மாவே சென்டிமென்ட் பார்க்கும் சினிமா தொடர்ந்து ஒரு சென்டிமென்ட் ஃபெயிலியர் ஆனால் விடுமா? இப்போது அந்த செண்ட்டிமெண்ட் எட்டிப் பார்ப்பது... சூர்யாவின் ’24’ படத்துக்கு!

அறை எண் 305ல் கடவுள், 49 ஓ, பத்து எண்றதுக்குள்ள , TN 07 4777, ஏழாம் அறிவு, 6 மெழுகுவர்த்திகள், 555 என தமிழ் சினிமாவில் நம்பர் டைட்டில் கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் நம்பரைக் குவிப்பதில்லை. சூர்யாவின் டைம்மெஷின் ட்ராவல் படமான ’24’ படமும் நம்பர் டைட்டில் தான்.

படக்குழுவினர் இந்த சென்டிமென்ட் குறித்து விவாதித்தார்களாம். ஆனால், அதை சூர்யாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லையாம். ’மாஸ்’ படத்துக்கு வரிவிலக்குக்காக மாசு என பெயர் மாற்றிய குழப்பங்கள் சூர்யாவுக்குப் பிடிக்கவில்லையாம்.அதனால் 24 டைட்டிலை மாற்ற அவர் விரும்பமாட்டாராம்.

அதுவும்போக, சூர்யாவுக்கு இப்படியான சென்ட்டிமென்ட் மீது நம்பிக்கை இருக்காது என்பதாலும், அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டாராம். எனினும் அத்திப் பூத்தாற்போல் இந்த நம்பர் செண்டிமெண்டில் சிக்கி வெற்றிகண்ட 7ஜி ரெயின்போ காலனி, 13ம் நம்பர் வீடு படங்கள் போல் ‘நம்பர் செண்ட்டிமெண்ட்’ வரலாற்றை தன் டைம் டிராவல் மூலம் சூர்யா மாற்றிக் காட்ட வாழ்த்துகள்! 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions