சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!

Bookmark and Share

சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!

சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘24’ படத்தை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் மாதவனை வைத்து ‘யாவரும் நலம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரும் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்த ஸ்ரீநிதியும் காதலித்து வந்தனர். ‘24’ படம் ஆரம்பிக்கும்போது நண்பர்களாக இருந்த இவர்கள், அந்த படம் முடியும்போது காதலர்களாக மாறினர்.

இந்நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாரானார்கள். அதன்படி, இருவரது பெற்றோரும் இவர்களது காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, தற்போது திருமண தேதியை உறுதி செய்துள்ளார்கள். அதன்படி, வருகிற செப்டம்பர் 4-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம்குமார்-ஸ்ரீநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதன்பின்னர், திருமண வரவேற்பு தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions