பாகுபலி 2 படத்தில் சூர்யா!

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் சூர்யா!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் பலர் நடிக்கும்  பாகுபலி படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டியுள்ளது. முதல் பாகத்தின் வசூலைப் பொறுத்து இரண்டாம் பாகத்திற்கு செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்கள்.

இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 25 சதவீதம்தான் முடிவடைந்துள்ளதாம். இன்னும் ஒரு வருட காலத்திற்குப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நிதிப் பிரச்சனை இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இரண்டாம் பாகத்தை வெளியிடலாம் என்றும் தெரிகிறது.

இதனிடையே, இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரான சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியுள்ளது. சூர்யா போன்ற நடிகர் இந்தப் படத்தில் நடித்தால் அது தமிழில் வெளியாகும் போது வியாபாரத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம்.

சூர்யாவிற்கு தெலுங்கிலும் ஓரளவிற்கு வரவேற்பு உள்ளதும் அதற்கு ஒரு காரணமாம். அதனால்தான், 'பாகுபலி' தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டார் என்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions