அப்பாவிடம் வியக்கும் அப்பாவி சூர்யா!

Bookmark and Share

அப்பாவிடம் வியக்கும் அப்பாவி சூர்யா!

நடிகர் சூர்யாவை அவரது அப்பா சிவகுமார் எளிமையான வாழ்க்கையை பழகிக் கொள்ளும்படிதான் வளர்த்திருக்கிறார். பள்ளிக்குக்கூட பஸ்ஸில்தான் அனுப்பியுள்ளார். பலருடைய வாழ்க்கைக் கதைகளைக் கூறி வழிகாட்டியிருக்கிறார்.

அப்போது நூறுபடங்களுக்கும் மேல் நடித்து அப்பா சம்பாதித்த பணத்தையும் புகழையும் இப்போது பத்து படங்களிலேயே சம்பாதித்து விட்டார் சூர்யா.

அப்பாவிடம் கவர்ந்தது எது என்று சூர்யாவிடம் கேட்ட போது..."அப்பாவைப் பின்பற்றி வாழ்வது அவ்வளவு கடினம், ஏனென்றால் அவ்வளவு விஷயங்களை கடைப்பிடிப்பவர் அவர். நாங்கள் ஏதோ முடிந்ததை பின்பற்றி வருகிறோம். அப்பாவிடம் நான் வியப்பது அவரது ஞாபக சக்தி.

இந்த விஷயத்தில் நான் கம்மிதான். படிப்பில் கூட நான் சராசரி மாணவன்தான். அவரது நேர்த்தி, நேரம் தவறாமை கண்டு வியப்பேன். திட்டமிடல் பிடிக்கும், வெளியூர் செல்ல நேரும் போது பெட்டியில் என்னென்ன வைக்க வேண்டும் என்று குண்டூசி முதல் பட்டியல் போடுவார்.

போனில் யாருடனாவது பேசப்போகிறார் என்றால் மறந்து விடக் கூடாது என்று பேச வேண்டிய விஷயத்தைக் கூட குறித்து வைத்துக் கொள்வார். இப்படி நான் அப்பாவிடம் வியப்பவை நிறைய உண்டு என்கிறார் சூர்யா.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions