நீங்கள்தான் நிஜமான ஹீரோக்கள்: மாணவர்களிடம் சூர்யா பேச்சு

Bookmark and Share

நீங்கள்தான் நிஜமான  ஹீரோக்கள்:  மாணவர்களிடம் சூர்யா பேச்சு

சூர்யாவுக்கும் 36க்கும் அப்படி என்னதான் ராசியோ? 36 வயதினிலே வெற்றிவிழாவுக்குப் பிறகு அவர் கலந்து கொண்டது 36 ஆம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா.

நல்ல மதிப்பெண் பெற்ற ஏழைமாணவர்களுக்கு பரிசளித்து சூர்யா பேசும்போது " எனக்கு எல்லாமே என் அப்பா தந்தது. உங்களைப் பார்க்கும் போது எனக்கு சொல்லத் தோன்றுவது இதுதான். நீங்கள்தான் சாதனையாளர்கள் .நீங்கள்தான் நிஜமான சாதனை வீரர்கள்.

நாங்கள் சாதாரணமானவர்கள்.நீங்கள்தான் நிஜமான ஹீரோக்கள். இந்த போராட்ட குணத்தை என்றும் கைவிட்டு விடாதீர்கள். நல்ல புத்தகமாகப் படியுங்கள் இந்த உலகத்தையே.புத்தகமாகப் படியுங்கள்.

கெட்ட பழக்கங்கள் எதுவும் வேண்டாம். 25 வயது வரை கெட்ட பழக்கங்களை தவிர்த்து விலக்கி விட்டால் அப்புறம் உங்களை யாரும் ஜெயிக்க முடியாது. சுற்றிலும் எல்லாம் இருக்கும்.

நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். கெட்ட நண்பர்களும் இருப்பார்கள். அவர்களை வெட்டி விடுங்கள்: இன்று எவ்வளவோ முன்னேறிய காலத்தில் இருக்கிறோம். எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்ட முன்னேறிய காலத்தில் இருக்கிறோம்.

இந்த உலகம் அழகானது .எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க முடியாது .எதிர் பார்க்காதீர்கள்.சில பந்தில் ஒரு ரன் வரும் .சில பந்தில் அதுவும் வராது. புரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று இப்படிப் போராளியாக இருப்பதிலிருந்து விலகி விடாதீர்கள். "இவ்வாறு சூர்யா பேசினார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions