சூர்யாவுடன் மோத விரும்பாத பாபி சிம்ஹா

Bookmark and Share

சூர்யாவுடன் மோத விரும்பாத பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கோ 2’. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். சரத் இயக்கியுள்ள இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘24’ படமும் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ‘கோ 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 13ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதாவது தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்ட படம் சரியாக தேர்தல் நேரத்தில் வெளிவருவதால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions