வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு

Bookmark and Share

வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:-என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர்.

எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு சிறந்த ஓவியருக்கான விருதுகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.என் தந்தை ஒழுக்கமாக வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையை நாங்களும் கடைப்பிடித்து வாழ ஆசைப்படுகிறோம். வெளிநாடுகளுக்கு செல்லும்போது இளைய தலைமுறையினர் உங்கள் தந்தை தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அவரின் அறிவுரைகளை பின்பற்றியே எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம் என்று சொல்கின்றனர்.

இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எனது தந்தை ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவுகள் நடத்தி உள்ளார். அடுத்து திருக்குறள் பற்றி பேசவும் தயாராகி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions