மழை வெள்ள மீட்பு மாநாடு நடத்தும் சூர்யா!

Bookmark and Share

மழை வெள்ள மீட்பு மாநாடு நடத்தும் சூர்யா!

சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி வருகிறார். சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மீட்பு பணியில் நேரடியாக இறங்கி வேலை செய்தார்.

தற்போது இந்நிறுவனம் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை கண்டறிந்து அதற்கு தேவையான உதவிகளை செய்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்கிறது.

இது தவிர மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கச்சூர், நெல்லூர், கிரகம்பாக்கம் என்ற 3 கிராமங்களை தத்தெடுத்து அதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்த பணிகளோடு சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மழை வெள்ளம் குறித்து இரண்டு நாள் மாநாடு ஒன்றை வருகிற ஜனவரி மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை செயிண்ட் பீட்டர் பள்ளி மைதானத்தில் நடத்துகிறது.

இதில் வெள்ளம் வந்தபோது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை அழைத்து அவர்களது அனுபவங்கள் கேட்கப்படும். அதோடு வெள்ள மீட்பில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இந்த மாநாட்டில் கவுரவிக்கப்படுவார்கள்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions