பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “

Bookmark and Share

பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “

சூர்யா நடிப்பில் , செல்வாராகவன் இயக்கத்தில் , ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “ சூர்யா 36“. இப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே படத்தின் முதல்கட்ட படபிடிப்பும் ,பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது. படத்துக்காக 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்தகட்ட படபிடிப்பு நடைபெறும். சூர்யா 36 திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன் , கலை R.K.விஜயமுருகன் , படத்தொகுப்பு G.K.பிரசன்னா , சண்டை பயிற்சி சாம்.

 


Post your comment





Related News
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions