'36 வயதினிலே' வெற்றியைக் கொண்டாடிய சூர்யா, ஜோதிகா

Bookmark and Share

'36 வயதினிலே' வெற்றியைக் கொண்டாடிய சூர்யா, ஜோதிகா

எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவந்துள்ள '36 வயதினிலே' படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக படத்தைத் தயாரித்துள்ள சூர்யா மகிழ்ச்சியடைந்துள்ளார். அதனால் தன்னுடைய மனைவி ஜோதிகா, குழந்தைகள் மற்றும் படக் குழுவினருடன் கேக் வெட்டி அந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.

ரோஷன் ஆன்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற படமான 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தின் ரீமேக் தான் '36 வயதினிலே'.  அந்தப் படத்தைப் பார்த்ததும் அதுதான் ஜோதிகாவின் ரீ-என்ட்ரிக்கு சரியான படம் என சூர்யாவும், ஜோதிகாவும் முடிவு செய்தனர்.

மேலும் அந்தப் படத்தைத் தானே தயாரிப்பது என சூர்யாவும் முடிவு செய்தார். குறுகிய காலத் தயாரிப்பாக உருவான அந்தப் படம் கடந்த 15ம் தேதி வெளியானது.

ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட அந்தப் படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 'ஏ' சென்டர்களில் மட்டும் படத்திற்கு வரவேற்பு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க உள்ளதாக சூர்யா அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்
தெலுங்குக்குப் போகும் \'36 வயதினிலே\'
என்னுள் இருந்த நெருப்பு...! 36 வயதினிலே ஜோதிகா!
36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!
ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை
8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!
புதிய கதைகள் கேட்கும் ஜோதிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions