பாகுபலி டிரைலரை வெளியிடும் சூர்யா

Bookmark and Share

பாகுபலி டிரைலரை வெளியிடும் சூர்யா

இன்றைய தேதியில் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய பட்ஜெட் படம் பாகுபலிதான். 'நான் ஈ' படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி உள்ள 'பாகுபலி' தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.  அதுமட்டுமல்ல, இப்படத்துக்கு செய்யப்பட்ட செலவை ஈடுகட்ட இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர்.

பாகுபலி படத்தின் முதல் பாகம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. தமிழில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது. சமீபத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் டிரைலருக்கு உலக அளவில் ரசிகர்களிடத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.  

டிரைலர் வெளியான சில நாட்களிலேயே 22 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த டிரைலரை பாராட்டித் தள்ளியுள்ளனர். இந்நிலையில் 'பாகுபலி' படத்தின் தமிழ் உரிமையை வாங்கி உள்ள  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.  

நாளை (ஜூன் 5) மாலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் விழா நடைபெறுகிறது. சூர்யா தலைமை தாங்கும் இவ்விழாவில், பாகுபலி படத்தின்  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது அண்ணனும் அப்படத்தின் இசையமைப்பாளருமான மரகதமணி, அப்படத்தில் நடித்த நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பாகுபலி படத்தின் வெளியீட்டு தேதியை நாளை நடைபெறும் விழாவில் அறிவிக்க இருக்கிறது - ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions