பாகுபலி பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா!

Bookmark and Share

பாகுபலி பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா!

தெலுங்குப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ள பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் நாயகனாகவும், ராணா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அவர்களுடன் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

ஜூலை 10ம் தேதி பாகுபலி திரைக்கு வருகிறது. இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு 7.30 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா தலைமை தாங்கி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

அதையடுத்து சூர்யா பேசுகையில்,

இந்த படத்துக்காக 3 வருடங்களாக கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். இப்படியொரு படம் எடுக்கப்பட்டதற்காக இந்திய சினிமாவே பெருமைப்பட வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒருநாள் நான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றிருந்தேன்.

அப்போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். நான் சென்றதை அடுத்து படப்பிடிப்பே நிறுத்தப்பட்டது. ஆனால், நாம் அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களது வேலை தாமதமாகும் என்பதால் வேகவேகமாக பேசிவிட்டு அங்கிருந்து வந்தேன்.

அதோடு, இந்த படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தாலும் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் நடிக்க தேவையில்லை. அதேசமயம் இந்த படத்திற்காக ஏதோ ஒரு வகையில் நானும் பயனாக இருந்ததை பெருமையாக கருதுகிறேன்.

இப்படியொரு சிறந்த படத்தை கொடுத்ததற்காக ராஜமவுலியை நான் பெருமையாக பார்க்கிறேன். இப்படியொரு பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் பிரமாண்ட படத்தை தமிழ் ரசிகர்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions