என் தந்தை இறந்தபோது முதல் ஆளாய் வந்து நின்றவர் சூர்யா – கௌதம் உருக்கம்!

Bookmark and Share

என் தந்தை இறந்தபோது முதல் ஆளாய் வந்து நின்றவர் சூர்யா – கௌதம் உருக்கம்!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள். தற்போது சூர்யாவுடனான நட்பு குறித்து பேசிய கௌதம், ” என் தந்தை இறந்த சமயத்தில் நான் ஊரில் இல்லை. அப்போது நான் முதல் ஆளாய் தொடர்பு கொண்டது சூர்யாவுக்குதான்.

ப்ரதர் என் தந்தை தவறிவிட்டார். வீட்டில் அம்மாவும் மனைவியும் மட்டுமே இருக்காங்க. நீங்க கொஞ்சம் பாத்துக்க முடியுமான்னு கேட்டேன். உடனே என் வீட்டுக்கு சென்று என் தந்தைக்கு உடை மாற்றியது முதல் எல்லா வேலைகளையும் செய்துவிட்டுதான் சூர்யா புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகே என் உறவினர்கள் வந்தார்கள்.

இடையில் சில கருத்து வேறுபாடு வந்தது. ஆனால் நாங்கள் இருவரும் பழசை மறப்பவர்கள் இல்லை. ஒரு இடத்தில் சந்தித்தபோது மீண்டும் பழையபடி பழக ஆரம்பித்துவிட்டோம். தற்சமயம் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக உள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் இணைவோம்” என்றார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions