பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!

Bookmark and Share

பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 24 படம் தற்போது ரீஷூட் நடந்துக்கொண்டிருக்கிறது. காரணம், டைம் மிஷின் கதையை தழுவி இந்த படம் உருவாகி வந்த நேரத்தில் இன்று நேற்று நாளை விஷ்ணு நடித்த படம் வெளியானது. இந்தப்படம் முழுக்க முழுக்க டைம் மிஷின் கதைதான். 

ஆனால் அதில் இடம்பெற்ற விஷயங்களைப் போன்றுதான் 24 படத்தின் கதையும் உருவாக்கப்பட்டிருந்ததாம். அதனால்தான், கண்டிப்பாக கதையில் நிறைய திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் தான் தயாரித்துள்ள பசங்க-2 படத்திலும் ஒரு வேடத்தில் நடித்தார் சூர்யா. முதலில் அதை ஒரு கெஸ்ட் ரோல் போன்று வைத்திருந்த பாண்டிராஜ், பின்னர் கமர்சியல் கருதி சூர்யாவுக்கான காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளார்.

இப்போது சூர்யா அந்த படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வருகிறாராம். அதனால் படத்தை வெளியிடும் போது சூர்யாவை பிரதானப்படுத்தி பெரிய அளவில் விளம்பரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார் பாண்டிராஜ்.

ஹைக்கூ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இப்போது பசங்க-2 என்று மாறியிருக்கும் அப்படம் முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படம். அதனால் ரசிகர்களும் அவர்களை மனதில் கொண்டுதான் தியேட்டருக்கு வருவார்கள். அதனால் இந்த சிறுவர்களுக்கான படத்தில் அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டாராம்.

மேலும் சிறுவர்களை வைத்து பாண்டிராஜ் இயக்கிய பசங்க, மெரினா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டடித்ததால் அவருக்கும், பசங்களுக்கும் உள்ள சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்டார் சூர்யா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions