ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா

Bookmark and Share

ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா


சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர் இன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சூர்யா குழந்தைகளுடன் டைனோசர் போல் நடந்து வரும் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டீசரில் குழந்தைகளின் யதார்த்தமான செய்கைகளை படம் பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்திருக்கிறார். அமலா பால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
குழந்தைகளை கவரும் வண்ணம் அமைந்துள்ள இப்படம் குழந்தைகள் மட்டுமல்ல, அனைவருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions