மீண்டும் சிக்ஸ் பேக்கில் களமிறங்கும் சூர்யா?

Bookmark and Share

மீண்டும் சிக்ஸ் பேக்கில் களமிறங்கும் சூர்யா?

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்காக முதன்முதலாக சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நடித்திருந்தார் சூர்யா. இப்படத்தை தொடர்ந்து, ‘அயன்’, ‘7-ஆம் அறிவு’ ஆகிய படங்களிலும் சிக்ஸ் பேக் உடற்கட்டுடனே நடித்திருந்தார். சிக்ஸ் பேக்கில் இவருடைய உடற்கட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றே கூறலாம்.

கடந்த சில படங்களில் சிக்ஸ் பேக் உடற்கட்டிலிருந்து மாறி நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், இவர் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா, தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு ஹரி இயக்கும் ‘சிங்கம்-3’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காகத்தான் சூர்யா சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

‘சிங்கம்’ பட வரிசையில் 3-வது பாகமாக உருவாகிவரும் இப்படத்தில் சூர்யா, வழக்கம்போல் போலீஸ் வேடத்திலேயே நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
சூர்யா படத்திற்கு கிடைத்த வெற்றி! ரசிகர்கள் அதிர்ச்சி
நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!
விஜய்யா? சூர்யாவா? பெரும் குழப்பத்தில் பிரபல இயக்குனர்!
சிங்கம் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலையே ஒரு சூப்பர் ட்ரீட்!
S3-யில் இவருடைய கடமை முடிந்ததாம்!
ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் S3!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions