இந்த வருடத்தின் கடைசி படங்கள் ஜெயம் ரவி, சூர்யா!

Bookmark and Share

இந்த வருடத்தின் கடைசி படங்கள் ஜெயம் ரவி, சூர்யா!

ஜெயம் ரவியின் பூலோகம் ,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்களுடன் இந்த வருடம் தனது வாழ்நாளை முடித்து கொள்ளப்போகிறது.

இந்த 2015 ம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் சுமார் 10% படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதில் வெற்றிகளை சுவைத்து கோலிவுட்டின் ஜெயமான நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.

இந்த 2015 முடிய இன்னும் சரியாக 11 நாட்களே உள்ளன. இதில் கடந்த வாரம் தங்கமகன் திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 24 ம் தேதி பூலோகம், பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இதே தேதியில் வெளியாகவிருந்த விமலின் அஞ்சலை மற்றும் ரமேஷ் அரவிந்தின் வில் அம்பு ஆகிய திரைப்படங்கள் எதிர்பாராதவிதமாக தள்ளிப் போயிருக்கின்றன. 

கடைசி நேரத்தில் இந்தப் படங்களில் ஒருசில மாறுதல்கள் ஏற்படலாம் எனினும் தற்போதைக்கு மேலே சொன்ன படங்கள் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. ஜெயம் ரவிக்கு ஏற்கனவே 2 படங்களின் மூலம் ஜெயம் கிடைத்து விட்ட நிலையில் சூர்யாவிற்கும் அது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions