நடிகர்–நடிகைகளின் புத்தாண்டு சபதம்

Bookmark and Share

நடிகர்–நடிகைகளின் புத்தாண்டு சபதம்

புத்தாண்டில் நடிகர் நடிகைகள் புதிய சபதம் எடுத்துள்ளனர். அவர்களில் சிலர்...

சூர்யா:–

ஒவ்வொரு வருடமும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. நான் ஒரு நல்ல தந்தையாகவும், கணவனாகவும், மனிதனாகவும் இருக்க முயற்சி செய்கிறேன். இந்த வருடம் எனது குழந்தைகள் தியா, தேவ் ஆகியோருடன் அதிக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறேன். கடந்த வருடம் படப்பிடிப்பு காரணமாக அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை.

கடந்த ஆண்டு இது பெரும் குறையாக இருந்தது. 2016–ல் எனது பொன்னான நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவேன்.

‘பசங்க–2’ படம் பெற்றோரிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி மூலம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எனது பட நிறுவனம் பொறுப்புடன் செயல்படும்.

சமந்தா:–

2016–ல் நான் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும். நான் எனது நடிப்பு திறமையை அதிகரிக்க வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறேன். எனது சமுக சேவையை அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும் என்பதும் எனது லட்சியம்.

ஜெயம் ரவி:–

2015 எனக்கு மிகவும் சிறந்த வருடமாக அமைந்தது. இந்த 2016–ல் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது படம் அனைவரும் ரசிக்கும் விதத்தில்தான் உழைப்பேன். இதுவே எனது புத்தாண்டு சபதம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நந்திதா:–

இந்த ஆண்டு எனக்கு சிறப்பான வருடமாக அமைய வேண்டும். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுவேன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions