ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி

Bookmark and Share

ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி

நடிகர் சூர்யா, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து நீங்களும், உங்கள் மனைவி ஜோதிகாவும் மீண்டும் ஜோடியாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானதே...இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவது உண்மையா?

பதில்:- அதற்கான பதில் விரைவில் வெளிவரும். ‘36 வயதினிலே’ படத்துக்குப்பின், அந்த மாதிரி மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு படம் அமையாதது ஏன்? என்று தெரியவில்லை. அது தள்ளிப்போவது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்காக மூன்று கதைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். எது முதலில் வரும்? என்பது விரைவில் தெரியும்.

கேள்வி:- ராஜமவுலி டைரக்ஷனில் நீங்கள் ஒரு படம் நடிக்கப் போவதாக பேசப்படுகிறதே?

பதில்:- ராஜமவுலியை நான் சந்தித்தபோது, ‘பாகுபலி’ மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தில் சின்ன வேடமாவது பண்ண வேண்டும் என்று அவர் மீது உள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக கேட்டேன். அப்படி ஒரு படம் எதிர்காலத்தில் அமையுமா என்று பார்க்கலாம்.

கேள்வி:- நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- அதுபற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- நடிகர் சங்கத்துக்காக தயாரிக்கப்படும் படத்தில் நீங்கள் நடிப்பீர்களா?

பதில்:- நிச்சயமாக நடிப்பேன். நடிகர் சங்கத்துக்காக கட்டப்படும் புதிய கட்டிடத்தில், அப்பா (நடிகர் சிவகுமார்) பெயரில் ஒரு திரையரங்கை கட்டிக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம்.

கேள்வி:- நீங்கள் நடத்தும் ‘அகரம்’ அமைப்பு சார்பில் எத்தனை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்?

பதில்:- ‘அகரம்’ சார்பில் 1,300 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் படித்து வெளியே வந்து வேலை வாய்ப்பு பெற்று அவர்களின் தம்பி-தங்கைகளை படிக்க வைக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக, ‘யாதும் ஊரே’ என்ற அமைப்பை தொடங்க இருக்கிறோம்.

கேள்வி:- ‘24’ படத்தில், நீங்கள் நடித்துள்ள வில்லன் வேடம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறதே?

பதில்:- அந்த வில்லன் வேடத்தின் பெயர், ஆத்ரேயா. படத்தின் முதுகெலும்பாக அந்த வேடம் அமைந்துள்ளது. வெறும் கோபக்கார வில்லனாக மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமானவராகவும் இருப்பார்.

கேள்வி:- ‘எஸ் 3’ படத்தில் நீங்கள் நடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு தூண்டுதலாக அல்லது தாக்கமாக அமைந்தவர் யார்?

பதில்:- தேவாரம், விஜயகுமார், சைலேந்திரபாபு போன்றவர்களை சொல்லலாம்.

கேள்வி:- திரையுலகில் நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்களா?

பதில்:- நினைத்ததை சாதித்து விட்டதாக கருதவில்லை. எல்லாமே அதுவாக நடந்திருக்கிறது. இதை ஆசி என்றுதான் சொல்ல வேண்டும்.’’

ªè£Àˆ¶‹ ªõJ™ è£óíñ£è ð£°ðL 2 ðìŠH®Š¹ îœO¬õŠ¹! 


Post your comment





Related News
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!
சூர்யா – ஜோதிகா பட இயக்குனர் திடீர் மரணம்!
சூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
ஜூனில் தொடங்கும் சூர்யா – ஜோதிகா படம்!
பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions