சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!

Bookmark and Share

சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளியான ’36 வயதினிலே’ திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என கமலின் பழைய பட டைட்டிலையே வைக்க படக்குழு யோசித்து வருகிறதாம். ஜோதிகாவின் கணவர் சூர்யா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 


Post your comment





Related News
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
சூர்யா – ஜோதிகா பட இயக்குனர் திடீர் மரணம்!
சூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி
ஜூனில் தொடங்கும் சூர்யா – ஜோதிகா படம்!
பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions