பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்

Bookmark and Share

பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்

பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று, ‘பசங்க 1’ ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை.

‘பசங்க–2’ நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளை பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள் பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.

குழந்தைகள் மிகவும் ஜாலியாக வந்து லூட்டி அடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள் ஆனால் இந்த படத்தில் எந்த விதமான காதல் காட்சிகளும் இடம் பெறாது. இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் பற்றியும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார். அமலாபாலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் தொடங்கினாலும் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக இருக்க வேண்டும் என்பதால்தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.

சூர்யாவிற்கு ஒரு ஜோடி கதைக்கு தேவைப்பட்ட நேரத்தில், சூர்யா ஜோதிகா என்று முடிவு செய்தோம் அவரும் சரி என்று சொன்னார். பின்பு ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபால் இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் இயக்குனர் விஜயிடம் பேசினேன்.

அமலாபால் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார். குழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம் எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான். இன்னொருவன் யு.கே.ஜி. படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள்.

எனக்கு பசங்க 2 படத்தின் ஊதியம் விஷால் படத்தை விட குறைவு தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை எத்தனை படம் இயக்கினாலும் குழந்தைகளுக்காக எப்போதும் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என் ஆசையும் மகிழ்ச்சியும். சமீபத்தில் காக்கா முட்டை பார்க்கும் போது அதுபோல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது.

பசங்க 2 குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும் படியாக இருக்கும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions