சூர்யா மகன் பிறந்தநாளை கொண்டாடிய சமூக வலைதள ரசிகர்கள்

Bookmark and Share

சூர்யா மகன் பிறந்தநாளை கொண்டாடிய சமூக வலைதள ரசிகர்கள்

சூர்யா-ஜோதிகா தம்பதியருக்கு தியா-தேவ் என இரு குழந்தைகள். இதில் இளையவரான தேவ்-க்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை பெற்றோர்களும், அவரது உறவினர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், சூர்யாவின் மகன் பிறந்தநாளை, தனது அபிமான நட்சத்திரத்தின் பிறந்தநாளைப் போன்று சூர்யாவின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் 'தேவ்' பிறந்தநாள் வாழ்த்து தற்போது டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. 

பலதரப்பட்ட ரசிகர்களும் தேவ்-க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு சூர்யாவும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். 
தனது மகள் மற்றும் மகனை இதுவரை எந்த பொது விழாக்களுக்கும் சூர்யா அழைத்து சென்றதில்லை.

முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘36 வயதினிலே’ ஆடியோ வெளியீட்டுக்குத்தான் இருவரையும் நேரில் அழைத்து வந்திருந்தார். அப்போதுதான் தனது பெற்றோருடன் தேவ் எப்படி குறும்புத்தனம் செய்கிறான் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேவ்-க்கு மாலைமலர்.காம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions