சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...

Bookmark and Share

சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...

சூர்யா, நயன்தாரா நடித்துள்ள 'மாஸ்' படம் இந்த மாதம் 15ம் தேதி வெளிவருவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.

அனேகமாக இந்த மாதம் 29ம் தேதியோ அல்லது ஜுன் 5ம் தேதியோதான் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 15ம் தேதி ஜோதிகா நடித்துள்ள '36 வயதினிலே' படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா மீண்டும் ரீ-என்ட்ரியாகியுள்ள '36 வயதினிலே' படத்தின் இசை வெளியீடு சில வாரங்களுக்கு முன்பே நடந்தது.

அதோடு அனைத்து வேலைகளும் முடிந்து படமும் வெளியாகத் தயாராக உள்ளது என்கிறார்கள். அதனால், முதலில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் 'மாஸ்' படத்தை வெளியிடலாம் என்றிருக்கிறார்களாம்.

தன் படத்திற்கு முன்பாக தனது மனைவி படம் வெளியாவதற்கு சூர்யா ஒன்றும் சொல்லப் போவதில்லை. மேலும் '36 வயதினிலே' படமும் சூர்யாவின் சொந்தத் தயாரிப்புதான். எனவே, '36 வயதினிலே, மாஸ், ஹைக்கூ' என சூர்யா சம்பந்தப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions