சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா

Bookmark and Share

சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா

ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை ரீமேக் செய்தால் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமா என்று சூர்யா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜோதிகா இரண்டு நாட்கள் எடுத்துள்ளார்.

சூர்யாவை காதல் திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். விளம்பரப் படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார்.

இந்நிலையில் தான் 8 ஆண்டுகள் கழித்து ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இல்லை, இல்லை நடிக்க அழைத்து வரப்பட்டுள்ளார்.சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள 36 வயதினிலே படம் மூலம் தான் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஜோதிகாவுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் அதை அடக்கி வைத்திருந்தார். இந்நிலையில் தான் ஒரு நாள் அவர் சூர்யாவுடன் சேர்ந்து மஞ்சு வாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை பார்த்து அசந்து போனார்.

ஹவ் ஓல்டு ஆர் யூ படம் தான் ஜோதிகா மீண்டும் திரைத்துறையில் நுழைய சரியான படம் என நினைத்தார் சூர்யா.ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை தமிழில் ரீமேக் செய்தால் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமா என சூர்யா ஜோதிகாவிடம் கேட்டுள்ளார்.

சூர்யா கேட்ட கேள்விக்கு 2 நாட்கள் நன்கு யோசித்து அதன் பிறகு சரி, மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என பதில் அளித்துள்ளார் ஜோதிகா.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions