எதிரெதிர் துருவங்களில் சூர்யா - கார்த்தி!

Bookmark and Share

எதிரெதிர் துருவங்களில் சூர்யா - கார்த்தி!

சூர்யா எடையைக் கூட்டிக், குறைத்து தோற்றத்தை மாற்றி எக்கச் சக்க வீட்டுவேலைகள் செய்து, அதாங்க ஹோம் ஒர்க் செய்து நடிப்பவர். அவர் முன்மாதிரியாக எடுத்துப்பார்க்கும் படங்கள் எல்லாம் ஈரானிய படங்கள் போல சீரியஸாக இருக்கும் அது போலவே பகீரதப் பிரயத்தனம் செய்து நடிக்கவும் முயல்வார்.

பேரழகன், காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் போன்றவை இதற்கு உதாரணங்கள். மாசு இதில் வராது. கார்த்தியை இதற்கு நேர் எதிர் துருவமாக கூறலாம்.

பத்து பேஸ்புக் கமெண்ட்கள், இருபது கடிஜோக்ஸ், கொஞ்சம் கலகல பஞ்ச் டயலாக் கலந்து கதை சொன்னால் அவரைக் கவிழ்த்து விடலாம் என்கிற அளவுக்கு அப்பாவியாக இருப்பார். வெளிநாட்டில் சினிமா படித்து வந்தாலும் அவர் அட்டகத்தி ,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற  படங்களைப் பற்றித்தான் பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிப் பாராட்டிச் சிரிப்பார்.

அப்படி ஒரு கலகலப்பு ரசிகர் அவர். கார்த்தி நடித்த படங்களைப் பார்த்தாலும் இது புரியும். ஆரம்பத்தில் நடித்த பருத்திவீரன், நான் மகான்அல்ல படங்களை விட்டு விட்டுப் பார்த்தால் சிறுத்தை,  சகுனி,அலெக்ஸ் பாண்டியன்,ஆல் இன் ஆல் அழகுராஜா பிரியாணி போன்ற படங்களைப் பார்த்தாலே கார்த்தியின் கலகல ரசனை புரியும். பேசுவது பழகுவதிலும் சூர்யா-கார்த்தி இருவருக்கும் அப்படி ஓர்  எதிர் துருவ வேறுபாடு இருக்கும். பத்திரிகையாளர்களிடம் அளந்துதான் பேசுவார் சூர்யா.

அதில் பேச்சு தவறாகிவிடக்கூடாது என்கிற கவனம் இருப்பதால் யதார்த்தமோ வெளிப்படையோ இருக்காது. கார்த்தி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதில் ஆப் தி ரெக்கார்ட் விஷயங்கள் கூட வந்து விழும்.

கவலைப்படமாட்டார் ஏனென்றால் அதுதான் அவர் இயல்பு. இப்படி ஒரு கொடியில் இப்படி இருவேறு மலர்கள் போல இருப்பவர்கள்தான் சூர்யா-கார்த்தி சகோதரர்கள்.


Post your comment

Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions