முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி

Bookmark and Share

முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி

`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை' ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.இதுஒருபுறம் இருக்க அண்ணன் சூர்யாவும் - தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதனை பூர்த்தி செய்யும் விதமாக புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயிண்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து நடித்தார்களானால், அது இருவரது ரசிகர்களுக்கும் டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அது எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
சூர்யாவின் மகனா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions