எனக்கு வில்லனே என் அண்ணன் தான் : கார்த்தி

Bookmark and Share

எனக்கு வில்லனே என் அண்ணன் தான் : கார்த்தி

பிரம்மாண்டமாக சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது.

டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் படக்குழுவையும், படத்தையும் வாழ்த்திப் பேசினர்,

கார்த்தி பேசுகையில்,

இந்தப் படம் கொஞ்சம் கொஞ்சம் நான் பார்த்தேன்...இந்தப் படத்துல மணின்னு ஒரு பையன் நடிச்சிருக்கான் ஹீரோவா, கஜினி படம் சுட்டும் விழிச் சுடரே பாட்ட நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல பார்த்தேன்,. பாட்ட பார்த்தோன சொன்னேன் பொண்ணுங்களாம் செத்தாளுகன்னு, இப்போ மறுபடியும் நடந்துருக்கு, படத்துல என்னோட நானே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு... அவ்ளோ அழகா இருந்தாரு. அப்பறம் ஒரு வில்லன் நடிச்சிருக்காரு.

ஒரு பத்து வயசு வரைக்கும் எனக்கு வில்லனா இருந்தது என்னோட அண்ணன் தான். ஆனால் இப்போ ஸ்க்ரீன்ல வேற லெவல்... ரஹ்மான் ராக்கிங் சார், அப்படியே சவுண்ட் ட்ராக் ரிலீஸ் பண்ணுங்க. எங்க மொபைலுக்கு தேவைப்படும் என்றவரிடம் உங்களுக்கு ஒரு டைம் ட்ராவல் கிடைச்சா உங்க அண்ணன் 5 வயசுலருக்காரு, எப்படி பழி வாங்குவீங்க? என்ற கேள்வி கேட்டபோது,

”என் அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் பிராணிகள் மேல என்ன அபப்டி ஒரு பாசம்னு தெரியாது, ரெண்டு பேரும் வீட்லருந்து நாய வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க, அப்போ நானும் வரேன்னு சொன்னா அதெல்லாம் வேணாம் நீ சின்னப் பையன்னு சொல்லிடுவாங்க..

இப்போ எனக்கு அந்தச் சான்ஸ் கிடைச்சா எங்க அப்பாவ அந்தத் தெருவுல நிக்க வெச்சு இவங்க ரெண்டு பேரும் என்ன செய்யறாங்கன்னு பாக்கணும்”.என கலகலவென பேசிய கார்த்தி 24 படத்தின் பிரம்மாண்ட டிரெய்லரை வெளியிட்டார். :


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions