நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

Bookmark and Share

நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 15-வது தென் இந்திய அளவிலான கலை விழா, ‘லாரிக்காஸ்-2016‘ என்ற தலைப்பில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். 

இணை செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, அறங்காவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை கவிஞர் கவிதாசன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு இடையிலான குழு நடனம், தனிநபர் நடனம், பாட்டுக்கு பாட்டு, முகஅலங்காரம், காய்கறி அலங்காரம், பூ அலங்காரம், கோலப்போட்டி, புகைப்பட போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 

இதில் தென் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நிறைவு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கேள்விக்கு, நடிகர் கார்த்தி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- 

கேள்வி: உங்கள் தந்தை சிவக்குமாரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? 

பதில்: சுயஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொண்டேன். 

கேள்வி: உங்கள் அண்ணன் சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது? 

பதில்: உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே. 

கேள்வி: சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பீர்களா? 

பதில்: நல்ல கதை அமைந்தால், நிச்சயம் சேர்ந்து நடிப்பேன். 

கேள்வி: எப்போது புதிய படத்தை இயக்குவீர்கள்? 

பதில்: படம் இயக்குவது மிகவும் பொறுப்பான பணி. சற்று பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும். 

கேள்வி: சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்தீர்கள்? அதில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது? 

பதில்: போலீஸ் கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி நடித்தேன். காவல்துறையை எனக்கு மிகவும் பிடிக்கும். 

இவ்வாறு அவர் பதில் அளித்தார். 

அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions