அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்

Bookmark and Share

அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசு என்கிற மாசிலாமணி படமும் வெற்றியடைந்திருந்தால் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் ஹாட்ரிக் வெற்றிப்படம் கொடுத்த சந்தோஷத்தில் திளைத்திருக்கும். 2015 ஆம் ஆண்டில் ஸ்டுடியோக்ரீன்  நிறுவனம் தயாரித்து வெளியிட்டது டார்லிங், கொம்பன் மற்றும் மாஸ் என்கிற மாசு என்கிற மாசிலாமணி ஆகிய மூன்று படங்கள்தான்.

இவற்றில் மாஸ் என்கிற மாசு என்கிற மாசிலாமணி படம் தவிர மற்ற இரண்டு படங்களும் வெற்றிப்படங்கள். அதிலும் குறிப்பாக கொம்பன் படம் பெரிய தொகையை வசூலித்துள்ளது. புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு காரணமாக கொம்பன் படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைத்து அதுவே அப்படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. பிரியாணி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்த கொம்பன் படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 

முத்தையா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்aதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். சென்டிமென்ட் கலந்த குடும்ப கதைகளை ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற கணிப்பில் கொம்பன் படத்தை தயாரித்தது  ஸ்டுடியோக்ரீன். அவர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வீண்போகவில்லை. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியான கொம்பன் படம் தற்போது 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

பல தியேட்டர்களில் கொம்பன் படம்  ஹவுஸ்ஃபுல் ஆகுமளவுக்கு இன்னமும் வெற்றிகரமாக ஓடுவதால் 100 நாட்கள் ஓட்ட இருக்கிறார்கள்.  மாசு என்கிற மாசிலாமணி  படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை கொம்பன் ஈடுகட்டி உள்ளதாகவும் தகவல்.


Post your comment





Related News
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?
டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
\'மாஸு என்கிற மாசிலாமணி\' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions