சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜெய்!

Bookmark and Share

சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜெய்!

புகழ் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரும் இன்னொரு படத்தை அறிமுக இயக்குனர் சினிஷும் இயக்கவுள்ளனர்.

இதில் சினிஷ் இயக்கும் படம் ஹாரர் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இதன்மூலம் 24-ல் சூர்யா மற்றும் கஷ்மோராவில் கார்த்தியை தொடர்ந்து ஜெய்யும் தற்போது மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதை 1989-ல் நடைபெறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு முழுக்க முழுக்க கொடைக்கானலில் மட்டுமே நடைபெறவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions