`தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் அடுத்த அப்டேட்

Bookmark and Share

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் அடுத்த அப்டேட்

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கேங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தெலுங்கில் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 


Post your comment





Related News
சூர்யா படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா
பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?
சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions