கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!

Bookmark and Share

கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!

சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து அயன், மாற்றான் ஆகிய படங்களை இயக்கி இருந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக படப்பிடிப்புகள் அமெரிக்கா, டெல்லி, ஹைதராபாத், பிரேசில், ஹைதராபாத் என கிட்டத்தட்ட 10 நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions