என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்

Bookmark and Share

என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்

சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த ‘மாஸ்’ படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார்.

இந்த படம் தெலுங்கு மொழியிலும் ‘ரக்ஷுடு’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சூர்யா தெலுங்கு நடிகர் பிரபாஸ், வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கோதண்டராமி ரெட்டி, யுவன்சங்கர் ராஜா, கே.இ.ஞானவேல்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது:– தெலுங்கு ரசிகர்கள் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறார்கள். என் படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் காட்டும் அன்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ரக்ஷுடு’ படத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு பணியாற்றியுள்ளோம்.

வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளார். யுவன் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். ‘ரக்ஷுடு’ படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடிகர் பிரபாஸ் இவ்விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி, அவர் இனிமையானவர். நான் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள் என்னை அவரது வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்தார். பிரியாணி சாப்பிட வைத்தார். அதன் ருசியை என்னால் மறக்க முடியாது.

அவரது குடும்பத்தினர் என்னை அன்போடு உபசரித்தார்கள். ராணாவும் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். பிரபாஸ் நடிக்கும் ‘பாகுபலி’ படத்தை நாடே ஆவலோடு எதிர்பார்க்கிறது. அப்படம் பெரிய ஹிட்டாகும்.
இவ்வாறு சூர்யா பேசினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions