சூர்யாவுடன் இருப்பது நயன்தாராவா?

Bookmark and Share

சூர்யாவுடன் இருப்பது நயன்தாராவா?

சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படத்திற்காக அவர்களிருவரும் உள்ள ஒரு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் இருப்பது நயன்தாராவா என ஆச்சரியப்படும் அளவிற்கு அவரை வேறு ஒரு அழகிற்கு மாற்றியிருக்கிறார்கள்.

ஹிந்தி ஹீரோயின்களைப் போன்ற மேக்கப்புடன் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறார் நயன்தாரா. சூர்யாவும், நயன்தாராவும் 'கஜினி, ஆதவன்' படங்களுக்குப் பிறகு 'மாஸ்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.

'கஜினி' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு உதவி செய்யும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'ஆதவன்' படத்தில் சூர்யாவின் காதலியாக, கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

'மாஸ்' படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்ன என்பதை இதுவரை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவிக்கவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரிலும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாகவே இருந்தன.

இருந்தாலும் இதுவரை சூர்யா, நயன்தாரா இணைந்து நடித்த இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளது. அந்த ராசி இந்தப் படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகியுள்ள 'மாஸ்' படத்தின் போஸ்டர் நயன்தாராவுக்காகவே அதிக லைக்குகளை வாங்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions