ஓ காதல் கண்மணி படத்துக்கு சூர்யா பாராட்டு

Bookmark and Share

ஓ காதல் கண்மணி படத்துக்கு சூர்யா பாராட்டு

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஓ காதல் கண்மணி' படத்துக்கு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. உலகம் முழுக்க வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, ஊடகங்களிலும் விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இன்னொரு பக்கம் ஓ காதல் கண்மணி படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் 'ஓ காதல் கண்மணி' படக் குழுவினரை குறிப்பாக மணிரத்னத்தை பாராட்டித் தள்ளுகின்றனர்.

இப்படம் வெளியான அன்றே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை அறிந்த நடிகர் சூர்யா 24 படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தபோது, கூடிய சீக்கிரம் 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

24 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த சூர்யா 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்த்துவிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் 'Just watched #OKKanmani! Mani sir,P.C sir,ARR.. WOW!! Couldnt take my eyes off the actors! Superb @dulQuer, nithya menon....! #Happy' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனனைத் தொடர்ந்து சூர்யா என நாளுக்கு நாள் இப்படி 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார் மணிரதனம்!

 


Post your comment

Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
50வது நாளில் இரண்டு படங்கள்...!
நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!
\'ஓகே கண்மணி\' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions