பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பூலோகம், தங்கமகன் மற்றும் மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களை மிஞ்சி சாதனை படைத்து வருகிறது சூர்யாவின் பசங்க 2.

வெளியாகி 2 வாரங்கள் முடிந்த நிலையிலும் வசூலில் எந்தக் குறையும் இல்லாமல் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது பசங்க 2 திரைப்படம். பசங்க 2, பூலோகம், மாலை நேரத்து மயக்கம் மற்றும் தங்கமகன் போன்ற படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இங்கே காணலாம்.

கடந்த வருடத்தின் கடைசிப் படமாக வெளியான பசங்க 2 முதல் வாரத்தில் வெறும் 60 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் 2வது வாரத்தில் 90 லட்சங்களை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

குழந்தைகளை மையப்படுத்தி வந்த இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த விமர்சனம் நன்கு உதவியுள்ளது. மேலும் சமீபத்தில் வந்த விடுமுறையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்ததில், தற்போது சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது பசங்க 2.


Post your comment





Related News
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!
சூர்யா படத்துக்கு அப்பா சிவகுமார் எழுதிய விமர்சனம்!
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
தயவு செய்து வேண்டாம் - ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் 50 ஆயிரம் நிதி உதவி
தன் படத்தை பார்த்து கண் கலங்கிய சூர்யா!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
நயன்தாராவின் அடுத்த ரொமான்ஸ் ஜெயம் ரவியுடன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions