மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

Bookmark and Share

மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் குதுகலமாக உள்ளனர். இன்னொரு புறம் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும், தோல்வி அடைந்தவர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். குறைவான மதிப்பெண் மற்றும் தோல்வி காரணமாக ஆறு மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

இது பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் நடிகர் சூர்யா அறிவுரை கூறி டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது:- வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல் மதிப்பெண் என்பது உங்களின் வெற்றியை ஒரு போதும் தீர்மானிக்காது என்பதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவரது எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை துவங்கி வருடம் தோறும் ஏழை மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். ஏராளமானவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கிறார். இது போல் இந்த வருடமும் கல்வி உதவிகள் வழங்கி இருக்கிறார்.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions