ரகுமான் படத்தை புரமோட் பண்ண கொச்சின் செல்லும் சூர்யா...!

Bookmark and Share

ரகுமான் படத்தை புரமோட் பண்ண கொச்சின் செல்லும் சூர்யா...!

மலையாளத்தில் சாதாரண ஒரு படமாகத்தான் உருவானது 'லாவண்டர்' என்கிற படம்.. படத்தின் கதையை எழுதியுள்ள அனூப் மேனன் ஓரளவு பிரபலமான முகம் என்றாலும் படத்தின் இயக்குனர் அட்லஸ் அலி புதியவர் தான்.

படத்தில் மெயின் ஹீரோக்கள் என யாரும் இல்லை.. ஆனால் நம் தமிழுக்கு தெரிந்த முகங்களான ரகுமானும் தலைவாசல் விஜய்யும் இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். காமெடிக்கு அஜு வர்கீஸ் இருக்கிறார்.

இந்த சமயம் தான் ரகுமானுக்கு சூர்யா தனது நன்றிக்கடன் தீர்க்கும் நேரம் என்றுகூட சொல்லலாம்.. காரணம் சிங்கம்-2 படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்து அவருடன் நட்பானார் ரகுமான், அந்த நட்பின் பேரில் தான் தனது தயாரிப்பான  '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க ரகுமானை அணுகினார் சூர்யா.

அவரும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அதேபோல அந்தப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரை வந்து கலந்துகொண்டார் ரகுமான்.  

இப்போது ரகுமான் தான் நடித்துள்ள மலையாளப்படமான 'லாவண்டர்' புரமோஷன் நிகழ்ச்சிக்கு மரியாதையை நிமித்தம் சூர்யாவை அழைக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் வர ஒப்புக்கொண்டாராம் சூர்யா..

வரும் மே-25ஆம் தேதி கொச்சி லுலு மகாலில் நடைபெறவுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் சூர்யா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions