ஆந்திராவுக்கு நிவாரணம் கொடுத்த நடிகர்கள் தமிழகத்தை தவிக்க விட்டது ஏன்?

Bookmark and Share

ஆந்திராவுக்கு நிவாரணம் கொடுத்த நடிகர்கள் தமிழகத்தை தவிக்க விட்டது ஏன்?

தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு ரூ.500 கோடியும், மத்திய அரசு ரூ.940 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள், தனியார்நிறுவனங்கள் மற்றும் பலர் வெள்ள நிவாரண நிதி அளித்து வரும் நிலையில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த எந்த பெரிய நடிகரும் இதுவரை வெள்ள நிவாரண நிதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

ஒருசில நடிகர்கள் உணவு, பெட்ஷீட், என உதவி செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டு ஆந்திராவை தாக்கிய ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு தமிழ் நடிகர்களான ரஜினி - ரூ.5 லட்சம், விஜய் - ரூ.5 லட்சம், விஷால் - ரூ. 15 லட்சம், சூர்யா - ரூ. 25 லட்சம், கார்த்தி - ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் - ரூ.12.5 லட்சம், சமந்தா - ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் - ரூ.5 லட்சம் என வள்ளலாக வாரி வழங்கினர்.

ஆனால் தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வரும் நிலையில் இன்னும் இந்த நடிகர்கள் ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணமாக அளிக்காதது ஏன்? என பலர் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions