சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்

Bookmark and Share

சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில், படஅதிபர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர். படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படஅதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்து, நேற்று முதல் படப்பிடிப்புகளும் துவங்கியிருக்கிறது. 

இதில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியிருக்கிறது. படப்பிடிப்பில் தானும் பங்கேற்றிருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions