சூர்யாவின் கிராமத்து படத்தில் இணையும் பிரபல நடிகர்!

Bookmark and Share

சூர்யாவின் கிராமத்து படத்தில் இணையும் பிரபல நடிகர்!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்துவரும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டில் இதன் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து நவம்பரில் ரஞ்சித் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படம் முடிந்ததும் சூர்யா நடிக்கும் படத்தை கொம்பன், மருது புகழ் முத்தையா இயக்கவுள்ளார். முத்தையாவின் முந்தைய படங்களை போல இதுவும் முழுக்க முழுக்க கிராமத்து பாணியிலான ஒரு படம் என கூறப்படுகிறது.

மேலும் தந்தை – மகன் பாசத்தை பேசும் இப்படத்தில் சூர்யாவின் அப்பாவாக ராஜ்கிரண் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions