24-ஆம் தேதி '24' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Bookmark and Share

24-ஆம் தேதி '24' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள 'பசங்க-2' இம்மாதம் 27- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல சிறுவர்கள் நடித்துள்ளனர்.

சூர்யாவின் '2டி' நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மற்றொரு படமான '24' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான 24 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சூர்யா  வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

படத்தின் பெயரும் 24 என்பதால் 24 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்திருக்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions