24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

மாஸ் படத்தை அடுத்து சூர்யாவின் நடிப்பில் வெளிவர உள்ள படம் - 24. யாவரும் நலம், மற்றும் மனம் என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் விக்ரம்குமார். இவரது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

மாஸ் படப்பிடிப்பை முடித்த உடன் 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மும்பையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் முதல் ஷெட்யூல் முடிவடைந்தது. சென்னை திரும்பிய சூர்யா தன் மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே மற்றும் அவரது நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி படங்களின் புரமோஷனுக்காக நேரம் செலவிட்டார்.

சென்னை தவிர ஈரோடு உட்பட வெளியூர்களுக்கும் சென்று தன் படத்துக்கும் தன் மனைவி படத்துக்கும் புரமோட் செய்தார். இந்தக்காட்சிகள் எல்லாம் தற்போது நிறைவடைந்து மீண்டும் 24 படத்தில் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார் சூர்யா.

நேற்று மும்பை புறப்பட்டு சென்றுள்ள சூர்யா இன்று முதல் 24 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சூர்யா உடன் சமந்தாவும் கலந்து கொள்கிறார். 24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டில் தொடர்ச்சியாக 30 நாட்கள் நடைபெற உள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி!
1 மில்லியன் டாலர் கிளப்பில் மீண்டும் இணைந்த சமந்தா!
24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது!
சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24!
24 தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்டுடியோ கிரீன்!
24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
24 படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions