சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

Bookmark and Share

சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கியிருந்த NGK படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தீபாவளிக்கு வருமா என்பது இன்னும் சந்தேகமாக் உள்ள நிலையில், அடுத்ததாக தற்போது கே.வி.ஆனந்த்துடன் நடித்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில் தற்போது அதற்கடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் 38வது படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதாகோங்ரா இயக்கவுள்ளாராம். ஜி.வி.பிரகாஷ் இசையையும் விவேக் பாடல்களை எழுதும் வேலையும் கவனிக்க உள்ளனராம்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் சூர்யாவின் 37வது படத்தின் வேலைகளே இன்னும் முடியாத வேளையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions